விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய விஸ்வதர்ஷினி கைது

டிகர் விஷால் மீது அண்மையில் ஒரு பெண்மணி பாலியல் புகார் கூறியிருந்தார்.

தனது வீட்டின் அருகேயுள்ள ஒரு 16 வயது இளம் பெண்ணின் வீட்டில் இருந்து தினமும் சுவர் ஏறிக் குதித்து விஷால் ஓடுவதாகசென்னையைச் சேர்ந்த விஸ்வதர்சினி என்ற பெண் புகார் கூறியிருந்தார்.

மீ டூ அமைப்பு வாயிலாக ஃபேஸ்புக்கில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் பாலியல் ரீதியாக தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக அந்த வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி சார்பில் தேசிய குழந்தைகள் நல ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.

புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில்சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தினர்.

புகார் உண்மையானதால் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்விஸ்வதர்ஷினி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

seventeen − fifteen =