விஸ்வாசம் மாஸ் ரிலீஸுக்கு ரெடி! அடிச்சு தூக்க ரசிகர்கள் ரெடியா?

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விஸ்வாசம்’.
இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இதன் தமிழ் உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்நிலையில், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் ஏரியா வாரியாக உரிமைகளை யார் கைப்பற்றியுள்ளனர் என்பதை தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
சென்னை – எஸ்.பி.ஐ சினிமாஸ், செங்கல்பட்டு – ட்ரைடெண்டு ஆர்ட்ஸ், கோயம்புத்தூர் – வால்மார்ட் பிலிம்ஸ், திருச்சி – சத்யஜோதி பிலிம்ஸ், சேலம் – 5 ஸ்டார் செந்தில், டி.கே – ஸ்ரீ ராஜ் பிலிம்ஸ், மதுரை – சுஷ்மா சினி ஆர்ட்ஸ், வட ஆற்காடு, தென் ஆற்காடு – எஸ் பிக்சர்ஸ் ஆகியோர் கடும் போட்டிக்கு இடையே ‘விஸ்வாசம்’ உரிமையைக் கைப்பற்றியுள்ளனர்.
ஏரியாவாரியாக வெளியிட்டு “எல்லா ஏரியாலயும் மாஸ் ரிலீஸுக்கு நாங்க ரெடி! பொங்கலா அடிச்சு தூக்க நீங்க ரெடியா? ‘விஸ்வாசம்’ பொங்கல்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம்.

Leave a Reply

Your email address will not be published.

11 − nine =