விஸ்வாசம் செகன்ட் லுக்; அஜித் ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த நிறுவனம்

சத்யஜோதி தயாரிப்பில் அஜித் இரு வேடங்களில் நடித்து உருவாகி வரும் படம் விஸ்வாசம்.

இப்படத்தின் மூலம் முதன்முறையாக இசையமைப்பாளர் இமான் அஜித்துடன் இணைந்துள்ளர்.

சிவா இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் நயன்தாராயோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் இதன் பர்ஸ்ட் லுக் வெளியானது. அப்போதே அந்த டிசைன் சரியில்லை என பலரும் கூறினர்.

விஸ்வாசம் பட டைட்டில் டிசைனும் சரியாக இல்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று செகன்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது அதை விட மோசமாக உள்ளதாக அஜித் ரசிகர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அஜித் பின்னால் இருக்கும் ஒரு நபர் 2 முறை அதில் இருக்கிறார். மேலும் அஜித்தின் இடது பக்கத்தில் இருக்கும் ஒரு தாத்தாவின் முகம் முழுவதுமாக இல்லை. அந்த இடத்தில் வேறு ஒரு எக்ஸ்ட்ரா பிட்டை கட் செய்து ஒட்டி வைத்துள்ளனர்.

இப்படி பல பேச்சுகளுக்கு விஸ்வாசம் டீம் உள்ளாகியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published.

six − one =