வீரமகள் பாசம்.. விஸ்வாசம் திரைவிமர்சனம்
வீரமகள் பாசம்.. விஸ்வாசம் விமர்சனம்
நடிகர்கள்: அஜித்குமார், நயன்தாரா, யோகிபாபு, ஜெகபதிபாபு, பரத் ரெட்டி மற்றும் பலர்
இயக்குனர் – சிவா
இசை – இமான்
ஒளிப்பதிவு – வெற்றி
எடிட்டர் – ரூபன்
பாடல்கள் – விவேக், தாமரை, யுகபாரதி, சிவா
தயாரிப்பு – சத்யஜோதி பிலிம்ஸ்
கதைக்களம்…
ஊரில் அடாவடி செய்பவர் தூக்கு துரை அஜித். ஆனால் ஊருக்காக எதையும் செய்பவர்.
இவரின் மனதை பார்த்து காதலித்து திருமணம் செய்கிறார் நயன்தாரா. இவர்களின் குழந்தை தான் அனிகா.
ஆனால் ஒரு கட்டத்தில் கணவனை பிரிந்து மும்பைக்கு செல்கிறார் நயன்தாரா.
10 வருடங்களுக்கு பிறகு மகளை பார்க்க செல்கிறார் அஜித்.
அங்கு மகளை கொல்ல ஒரு கும்பல் திட்டமிடுகிறது.
அவர்கள் யார்.? அது ஏன் ? தூக்கு துரை என்ன செய்தார்..? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
ஒரே அஜித். ஆனால் 2 கேரக்டர்களில் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். கருப்பு தாடி அடாவடி என்றால் வெள்ளை தாடி அன்பின் வழி.
மகளுக்காக உருகி நம்மையும் கரைய வைக்கிறார்.
நயன்தாராவுக்கும் அனிகாவுக்கும் நடிப்பில் அவ்வளவு போட்டி. தாய்மார்களை இருவரும் நடிப்பில் கட்டிப் போடுகின்றனர்.
வில்லன் வேடத்தில் ஜெகபதி பாபு ஜொலிக்கிறார்.
தம்பி ராமையா, விவேக், ரோபோ சங்கர், யோகி பாபு, கோவை சரளா, மதுமிதா இருந்தும் காமெடி இல்லையே என்பது வருத்தம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இமான் இசையில் வேட்டி கட்டு, அடிச்சி தூக்கு… பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும்.
தாமரை வரிகளில் கண்ணான கண்ணே பாடல்கள் தாய்மார்களை கவரும். 2 முறை பாடல் வந்தாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.
பின்னணியில் ஒலிக்கும் போது ரசிக்க வைக்கிறது.
அஜித் படங்களில் மாஸ், பன்ச், ஆக்சன் இருக்கும். ஆனால் இதில் சென்டிமெண்ட் கலந்து கொடுத்திருக்கிறார் சிவா.
ஒளிப்பதிவாளர் வெற்றி & எடிட்டர் ரூபன் இருவரும் கச்சிதம்.
சிவாவின் க்ளைமாக்ஸ் வசனங்கள் அப்ளாஸை அள்ளும்.
18 வயதுக்குள் உள்ளவர்கள் தற்கொலை செய்தால் அது கொலை என சொல்லியிருப்பது சூப்பரூ.
பெற்றோர் ஆசையை குழந்தைகளிடம் திணிக்காதீர்கள் என நச்சுன்னு சொல்லியிருக்கிறார் டைரக்டர் சிவா.
விஸ்வாசம்… வீரமகள் பாசம்..!