2.0 பட முன்னோட்டம்: இந்த படத்தை பார்க்க இத்தனை காரணங்களா..?

உலக சினிமாவே வியக்கும் அளவுக்கு இந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள படம் 2.0.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் சுபாஷ்கரன் ரூ. 600 கோடியில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஷங்கர் இப்படத்தை முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் இயக்கியுள்ளார்.

ஆஸ்கர் விருது வென்ற ஏஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும் படத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை பார்ப்போம்.

இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமாருடன் எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.

இதில் 3 வேடங்களில் ரஜினி நடித்துள்ளார். மேலும் ஒரு சிறப்பு தோற்றமும் உள்ளது. அது இதுவரை சஸ்பென்ஸாக உள்ளது. அண்மையில் ஒரு பேட்டியில் கூட ரஜினி அதைப் பற்றி சொல்லவில்லை.

கண்களுக்கு 3டி டெக்னாலஜியும், காதுகளுக்கு 4டி ஒலி டெக்னாலஜியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறதாம். படத்தின் பாதி பட்ஜெட் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்திரலோகத்து சுந்தரி பாடலுக்கு மட்டும் 20 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்தியாவில் மட்டும் 6500 தியேட்டர்களில் வெளியாகிறதாம். கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 440 தியேட்டர்களில் வெளியாகிறது.

சென்னையிலும் ஒரு சில தியேட்டர்களில் 1000 ரூபாய் வரை இப்படத்திற்கான டிக்கெட் விற்கப்படுகிறது. மும்பையில் 1500 முதல் 200 வரை விற்கப்பட்டுள்ளது.

இந்த உலகமானது மனிதர்களுக்கு மட்டுமில்லை என்ற கருத்தையும் செல்போன் கதிர் வீச்சுகளால் பறவைகளுக்கு ஏற்படும் ஆபத்தையும் இப்படம் உணர்த்தும் என கூறப்படுகிறது.

இதுபோன்ற கருத்துக்களால் செல்போன் ஆப்ரேட்டர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மறு தணிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இடைவேளைக்கு பிறகு கிட்டதட்ட 1 மணி நேரம் கிளைமாக்ஸ் இருக்கும் என ஷங்கர் தெரிவித்துள்ளார். அதில் 4 விஷயங்கள் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவு – நிரவ் ஷா, படத்தொகுப்பு – ஆண்டனி, பாடல்கள் – பாஸ்கர் பத்லா, மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கலை – டி.முத்துராஜ், சண்டைபயிற்சி – ஸ்டண்ட் சில்வா, ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி

விமர்சனத்துடன் நாளை சந்திப்போம்…

 

 

Leave a Reply

Your email address will not be published.

17 + eight =