பாகுபலி2 சாதனையை முதல் நாளில் முறியடிக்க 2.0 திட்டம்

இதுவரை இந்திய சினிமாவே தொடாத பட்ஜெட்டான ரூ. 600 கோடியில் 2.0 படத்தை தயாரித்துள்ளது லைகா நிறுவனம்.

டைரக்டர் ஷங்கர் இப்படத்தை 3டியில் படமாக்கியுள்ளார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வருகிற நவம்பர் 29ஆம் தேதி இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிட உள்ளனர்.

இந்தியாவில் மட்டும் 6800 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாம். உலகம் முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்திய சினிமாவை பொறுத்தவரை பாகுபலி 2 படம்தான் அதிக தியேட்டர்களில் அதாவது 6,500 தியேட்டர்களில் வெளியானது.

அந்த சாதனையை 2.0 படம் முறியடிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் முதல் நாள் வசூலில் பாகுபலி 2 சாதனையை முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *