சூப்பர் ஹிட்டான மோகன்லால் படம் ரீமேக்; சிவகார்த்திகேயன் நடிப்பாரா?

சூப்பர் ஹிட்டான மோகன்லால் படம் ரீமேக்..; சிவகார்த்திகேயன் நடிப்பாரா..?

மோகன்லால், திலகன், ஸ்ரீவித்யா, ஷோபனா, ஸ்ரீனிவாசன், நெடுமுடி வேணு  ஆகியோர் நடிப்பில் 1994-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற மலையாளப் படம் ‘பவித்ரம்‘.

டி.கே.ராஜீவ் குமார் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இதில் மோகன்லாலின் தாய் ஸ்ரீவித்யா(தற்போது அவர் உயிருடன் இல்லை)தனது 50வது வயதில் கர்ப்பம் ஆவதாக கதை அமைக்கப்பட்டு இருக்கும்.

தற்போது 25 வருடங்களுக்கு பிறகு இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

இதில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க முயற்சிக்கிறார்களாம்.

அவர் ரீமேக் படத்தில் நடிப்பாரா? என்பதுதான் தெரியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published.

six + 16 =