டிசம்பர் 14-ல் 11 படங்கள் ரிலீஸ்; டிசம்பர் 21-ல் 9 படங்கள் ரிலீஸ்

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் பதவிக்கு வந்த பின்னர் அதிரடியாக சில செயல்களை செய்தனர்.

அதில் மிக முக்கியமானது சங்கம் அறிவித்துள்ள தேதியில்தான் படங்களை தயாரிப்பாளர் ரிலீஸ் செய்ய வேண்டும் என அறிவித்தனர்.

அதன்படி சில படங்கள் வெளியானது. ஆனால் அண்மைக்காலமாக சில படங்களை சங்க அனுமதியின்றி வெளியிட்டு வருகின்றனர்.

தனுஷின் மாரி2, விஜய்சேதுபதியின் சீதக்காதி உள்ளிட்ட படங்கள் சங்க அனுமதி பெறாமல் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனையடுத்து 2018 கிறிஸ்துமஸ் மற்றும் 2019 பொங்கல் தினத்தில் எத்தனை படங்களை வேண்டுமானாலும் ரிலீஸ் செய்துக் கொள்ளுங்கள் என கூறிய சங்கம் இந்த பிரச்சனையில் இருந்து தன்னை விலக்கி கொண்டது.

இதனால் அதிக எண்ணிக்கையில் படங்கள் திரைக்கு வருகின்றன.

வருகிற 14-ந் தேதி பிரசாந்த் நடித்துள்ள ஜானி, விக்ரம் பிரபு நடித்துள்ள துப்பாக்கி முனை, நுங்கம்பாக்கம், தேவகோட்டை காதல்,பயங்கரமான ஆளு, துலாம், பிரபு, திரு, மோகன்லாலின் ஒடியன், சமுத்திர புத்திரன், ஸ்பைடர்மேன் புதிய பிரபஞ்சம் ஆகிய 11படங்களை திரைக்கு கொண்டு வரவுள்ளது.

இதனையடுத்து அடுத்த வாரம் 20-ந் தேதி விஜய்சேதுபதியின் சீதக்காதி, 21-ந் தேதி ஜெயம் ரவியின் அடங்க மறு, தனுஷின் மாரி-2,சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜீரோ, விஷால் வெளியிடும் கேஜிஎப், அந்தரிக்‌ஷம், படி படி லெச்சே மனசு ஆகிய 9 படங்கள் திரைக்கு வருகின்றன.

ஆக மொத்தம் 2 வாரங்களில் சுமார் 20 படங்கள் திரைக்கு வருகிறது.

இதனால் தியேட்டர்களை பிடிப்பதில் தயாரிப்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *