“கே .ஜி .எப்” படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர் யஷ்

தமிழ்திரையில் ஒரு புதிய நாயகன் உதயாமாகிறான். யஷ் கர்நாடக மக்களின் உள்ளத்திலும் உதட்டிலும் ஓங்கி ஒலிக்கும் பெயர்… தற்போது

தமிழகத்தில்…. ”பேருந்து ஓட்டுனரின் மகனாக திரைத்துறையில் எந்த பின்புலமின்றி போராடி, வெற்றி பெற்ற கர்நாடகத்தின் டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ்” என்று பாகுபலி டைரக்டர் ராஜமவுலியால் பாராட்டு பெற்ற யஷ். நடிப்பில் வெளிவரும் படம் K.G.F. Chapter 1

இது K.G.F என்ற கோலார் தங்க வயலின் பின்னனியை கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். 1978-ல் ஈரானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடந்த பனிபோரால் US-க்கும் சோவியத் யூனியனுக்குமான
பகை அதிகமாகியது… அதன் பாதிப்பு மொத்த உலகத்தையும் ஆட்டி படைத்தது. OIL, COFFEE, STEEL, COTTON இதோட சேர்ந்து தங்கத்தின் விலையும் விண்ண தொட்டது… 70 இறுதி மற்றும் 80 தொடக்கங்களில்
K.G.F-ல் கிடைக்கும் தங்கத்தால் அந்த இடத்தை கைப்பற்ற மாஃபியாக்கள் இடையே பெரிய போட்டி நடந்தது. அரசியல் தலைவர்கள் பன்னாட்டு பெரும் புள்ளிகள், மாஃபியாக்கள், இடையே நடந்த போட்டியில் எந்த பின்புலமின்று சுயம்புவாக உருவாகிய ராக்கி (யஷ்) ”உனக்கு பின்னாடி ஆயிரம் பேர்
இருக்றாங்கற தைரியம் இருந்துச்சினா உன்னால ஒரு போர்லதான் ஜெயிக்க முடியும். ஆனா அதே ஆயிரம் பேருக்கு நீ முன்னாடி இருக்குறேங்கற தைரியம் இருந்துச்சினா இந்த உலகத்தையே ஜெயிக்கலாம்.” என்ற
தாய்யின் வாக்கின்படி சூழ்ச்சிகளுக்கும் இரத்தகறைகளுக்கும் இடையே போராடி அடிமைகளை மீட்டு K.G.F தங்கச் சுரங்கத்தில் தனது சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தியதே K.G.F Chapter 1 படத்தின் கதை கருவாகும்.

இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.
இப்படத்தில் பல காட்சிகளில் அதிக புழுதிபுயல் 10 அடி உயரத்திற்கு தேவைப்பட்டது. கம்ப்ரெஸ்ர்கள் மட்டுமின்றி கரும்புகையை உருவாக்க பழைய மண்ணெண்ணெய் மெஷின்களை வாங்கி அதன் மூலம் புழுதி புயல் ஒருவாக்கப்பட்டது. எழுபதுகளின் இறுதி என்பதுகளின் தொடக்கத்தில் கதை
நடப்பதால் பிளாக் மற்றும் பிரௌன் கலர்களுக்கு அதிக முக்கியத்துவம்
தரப்பட்டுள்ளது.

தங்கச்சுரங்கத்தின் அரங்க அமைப்புகள் கோலார் தங்க வயலில் போடப்பட்டு புகை, புழுதி மற்றும் நெருப்புகளுக்கு இடையே 8 மாதங்கள் 4 ஆயிரம் துணை நடிகர்களுடன் படமாக்கப்பட்டது.
படப்பிடிப்பில் சினிமா லைட்டுகளை உபயோகிக்காமல் இயற்கையான லைட் சோர்ஸ்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டது. நெருப்பு மற்றும் வத்திக்குச்சிகளால் மட்டுமே பல காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது.
அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கனினால் இரண்டரை வருடங்களாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதலில் கன்னடத்தில் மட்டும் ரிலிஸ் செய்வதற்காக இந்த படம் தொடங்கப்பட்டது. படம் வளர வளர இதன் அசுர வளர்ச்சி எங்களை அனைத்து மொழிகளுக்கான படம் இது என்பதை உணர வைத்ததாக படத்தின் நாயகன் யஷ் கூறினார்.

யஷ், ஸ்ரீநிதிஷைட்டி, அனந்த் நாக், மாளவிகா ஆகியோறது நடிப்பில் அன்பறிவு சண்டை இயக்கத்தில், ஸ்ரீகாந்த் படதொகுப்பில், கே.ஜீ.ஆர் அசோக் வசனத்தில், புவன்கவுடா ஒளிப்பதிவில், ரவி பசூரூர் இசையில், பிரசாத் நீல் இயக்கத்தில் ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தர் தாயாரிப்பில் கே.ஜீ.எப் படம் உருவாகியுள்ளது. விஷால் பிலிம் பேக்டரியால் ரிலிஸ் செய்யப்படுகிறது.

கபிலன், மதுர கவி, கணேஷ் ராஜா, ஆகியோர் இப்படத்தில் பாடல் எழுதியுள்ளனர்.

K.G.F. திரைபடம் இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி. K.G.F Chapter 1 திரைபடம் டிசம்பர் 21 ம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் ரிலிஸ்யாகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *