எண்ணித்துணிக விமர்சனம் (3/5)

ஜெய், அதுல்யா ரவி, சாம் சுரேஷ், வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடிப்பில் எஸ் கே வெற்றிச்செல்வன் இயக்கத்தில் உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ள திரைப்படம் எண்ணித் துணிக.

கதைப்படி..,

படத்தில் வில்லன் சாம் சுரேஷ்க்கு 2000 கோடி ரூபாய் வைரத்தை கொள்ளையடித்துக் கொடுக்க வேண்டிய வேலையை வம்சி கிருஷ்ணா செய்ய முற்படுகிறார். அப்போது வம்சி கிருஷ்ணா தலைமையிலான நான்கு பேர் கொண்ட கும்பல் கொள்ளையடிக்கிறது. ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் தங்க நகைகளை பங்கு போட்டுக் கொள்ளுங்கள் வைரத்தின் மதிப்பை குறிப்பிடாமல் வைரம் எனக்கு என டீல் பேசுகிறார்.

அரசியல்வாதி சுனில் செட்டியின் பினாமி வைத்துள்ள நகைக்கடையை கொள்ளையடித்தால் இந்த கடத்தலை போலீஸ் ஒரு புறம் விசாரிக்க, அதே கொள்ளையால் பாதிக்கப் பட்ட ஜெய் ஒருபுறம் விசாரிக்கிறார். பின்பு அந்த கொள்ளையை முதலில் கண்டுபிடித்தது யார்? ஜெய் உதலில் கண்டுபிடித்தாரா? வைரங்கள் என்ன ஆனது? என்பது மீதிக்கதை.

நடிகர் ஜெய் இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

வம்சி கிருஷ்ணா, சாம் சுரேஷ் என படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். அதுல்யாவுக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இயக்குனர் வெற்றிச்செல்வன் இயக்கம் சிறப்பு. காதல் காட்சிகள் பலவற்றை நீக்கலாம் என்ற எண்ணமும் தோன்றும். கதையில் சுவாரஸ்யமான திருப்பங்களை வைத்தது தான் இயக்குனரின் பலம்.

சுரேஷ் சுப்பிரமணியம் கதையில் புதுமையை சேர்த்திருந்தால் படம் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

இந்த படத்தில் தினேஷ்குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுக்க சாம் சி எஸ் இசை பலம்
சேர்த்துள்ளது.

எண்ணித்துணிக – ஜெய்யின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி.

Leave a Reply

Your email address will not be published.

two × 1 =