விஜய்க்கு முன்பே 3டியில் யோகி பாபு.; வேதாளமாக மாறுகிறார்
விஜய்யுடன் ‘சர்கார்’ மற்றும் அஜித்துடன் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் யோகிபாபு.
விரைவில் கூர்கா படத்தில் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார்.
சாம் ஆண்டன், இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில், 3டி-யில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறாராம் யோகி பாபு.
இதில், வேதாளமாக நடிக்கிறார்.
இந்தப் படத்தை, ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்கவுள்ளார்.
சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு 3டி படத்தில் நடிக்க கேட்டுக் கொண்டார் சன் டிவி கலாநிதி மாறன்.
விஜய் நடிப்பாரா? தெரியல. ஆனால் காமெடி நடிகரான யோகிபாபு முந்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.