அஜித்துடன் நடித்தாலும் விஜய் வெற லெவல்…- யோகிபாபு ஓபன் டாக்

விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விஜய்யுடன் ஏஆர். ரஹ்மான், ஏஆர். முருகதாஸ், சன் டிவி கலாநிதிமாறன், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அவ்விழாவில் யோகிபாபு பேசியதாவது…

‘ நான் இப்போதுதான் ஒரு பட சூட்டிங் முடித்துவிட்டு வந்திருக்கிறேன். சர்கார்’ போன்ற பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம்.

விஜய் அண்ணாவுடன் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி.

ஹீரோ கேரக்டரெல்லாம் இல்லை. அடுத்த படத்திலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறேன்.

என்னுடைய மூளை எனக்கு சோறு போடல. முடிதான் சோறு போடுது.

மெர்சல் படத்தில் சில காட்சிகளில் விஜய் அண்ணாவுடன் நடிக்கும்போது கொஞ்சம் தயங்கினேன். தொழில் என்று வந்துவிட்டால் சரியாகச் செய்ய வேண்டும் தயங்கக்கூடாது என்று விஜய் அண்ணன் தான் அட்வைஸ்செய்தார்.

பல நடிகர்களுடன் நடித்துவிட்டேன். விஸ்வாசம் படத்தில் அஜித்துடனும் நடித்து விட்டேன். ஆனால் விஜய் அண்ணா வேற லெவல் என்று கூறினார்.

அவர் இதை சொன்னவுடன் ரசிகர்களின் ஆரவாரம் அடங்க வெகு நேரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *