இனிமே இந்த சீன்ஸை சர்கார் படத்தில் பார்க்க முடியாது

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் சர்கார்.

தீபாவளி தினத்தில் இது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில் ஆளும் அதிமுக.வை விமர்சனம் செய்யும் வகையில் பல வசனங்கள் இருந்தன எனவும் ஜெயலலிதாவின் இயற்பெயர்“கோமளவல்லி” எனும் பெயரை வில்லி வேடத்துக்கு வைக்கப்பட்டிருந்தது என்பதாலும் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த காட்சிகள் நீக்கப்படும் வரை போராட்டம் நடத்துவோம் என்றனர். இதனால் பல தியேட்டர்களில் காட்சிகள் நிறுத்தப்பட்டன.

எனவே இன்று காலை மறு தணிக்கை செய்யப்பட்டு சில காட்சிகளை நீக்கி சில வசனங்களை மியூட் செய்துள்ளனர்.

அவை..

இப்படத்தில் வரும் கோமளவல்லி என்று பெயர் குறிப்பிடப்படும் காட்சியில் மியூட் (ஒலியடக்கம்) செய்யப்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயில் தூக்கிப் போடும்  காட்சிகள் நீக்கப்படுகிறது.

மேலும் பொதுப்பணித்துறை பெயர் வரும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *